Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முகப்பு கல்வி, பொழுதுபோக்கு உலக மரபுரிமை நிலப்பிரதேசம்
உலக மரபுரிமை வன பூமி

இலங்கையிடம் காணப்படுகின்ற இயற்கை உலக மரபுரிமையாக பிரகரனப்படுத்தப்பட்டுள்ள இரண்டு வனங்கள் காணப்படுவதுடன், இந்த வனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள், கற்கைகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான சிறந்த இடமாக இவை இனங்காணப்பட்டுள்ளன. இந்த வனங்கள் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினால் முகாமைத்துவம் செய்யப்படுகின்றது.

  1. சிங்ஹராஜவனம்
  2. நக்கல்ஸ் வனாந்தர வகுப்பு

சிவனொளிபாத மலை, வலவை மற்றும் மொஹெல வனக்காப்பொதுக்கப் பிரதேசம் (இந்த வனங்கள் 2010 ஆம் ஆண்டிலே பிரகடனப்படுத்தப்பட்ட) "இலங்கையில் மத்திய மலைநாட்டுப் பிரதேசம்" (Central Highlands of Sri Lanka) உலக மரபுரிமைக்குச் சொந்தமான வனங்களாகும்.

சிங்ஹராஜவனம்

"சிங்ஹ அரசன்" என்ற பொருளுடைய பெயர் இதற்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பிரதேசமான 1875 இலே வனஒதுக்குப் பிரதேசமாக பிரகடனபப்படுத்தப்பட்டதுடன், 1978 ஆம் ஆண்டிலே சர்வதேச மனிதன் மற்றும் ஜீவபோல ஒதுக்குப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்ட்டது. அதன்பின்னர் 1988 ஆம் ஆண்டிலே தேசிய மரபுரிமைப் பிரதேசம் ஒன்றாக பெயரிடப்பட்டது. 1989 ஆம் ஆண்டிலே, ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பினால் (யுனெஸ்கோ) உலக மரபுரிமை ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது. சிங்ஹராஜவனமானது 11,185 ஹெக்டெயர் பாரிய நிலப்பரப்பை கொண்டுள்ளது.

நுழைவாயில்:

சிங்ஹராஜவனத்தில் நுழைவதற்கு பிரதான 3 நுழைவாயில்கள் காணப்படுகின்றன.

  1. கொழும்பு - இரத்தினபுரி - களவானை வீதி (குடவ நுழைவாயில்)
  2. கொழும்பு - ரக்வானை - மோர்னிங் சைட் வீதி (மோர்னிங்சைட் நுழைவாயில்)
  3. கொழும்பு - தெனியாய - மெதபிட்டிய வீதி (பிட்டதெனிய நுழைவாயில்)
Click here to get large map
காலநிலை மற்றும் புவியியல் தன்மை:

சிங்ஹராஜவனத்திற்கு வருடாந்தம் 3,000 - 6,000 மி.மீ. வருடாந்த மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறுவதுடன், ஆண்டு முழுவதிலும் இப்பிரதேசத்தில் மழை காணப்படுகின்றது. சராசரி வருடாந்த வெப்பநிலையானது சென்றிகிரேட் பாகை 20 - 25 இடையில் காணப்படுகின்றது. சிங்ஹராஜவனமானது குன்றுகள், மலைஉச்சிகள் மற்றும் சமவெளி நிலப்பிரதேசங்களை உள்ளடக்கிய பல்லினத்தன்மை கொண்ட புவியியல் மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு பிரதேசமாகும்.

மரங்கள்:

சிங்ஹராஜவனத்திலே காணப்படுகின்ற மரவகைகள் பிரதானமாக ஆரம்பநிலை வெப்பவலய கீழைத்தேய ஈரவலய வனவகைகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் உயர் மலைப்பிரதேசங்களில் காணப்படும் வனங்கள் மற்றும் துணை மலைப் பிரதேசங்களில் காணப்படும் புல்நிலங்களும் இங்கே காணப்படுகின்றன. இந்த தனிச்சிறப்புமிக்க வனத்திலே சூழலியல் பல்லினத் தன்மைக்கான நன்னீர் வாசஸ்தலங்கள், மலைகளுடனான நிலப் பிரதேசங்கள் மற்றும் ஏனைய சூழலியல் முறைமைகள் இதற்குப் பாரிய பங்களிப்புச் செய்துள்ளது.

இந்த வனத்தினை கிடைவெட்டினூடாக நோக்கும் போது மிகவும் தெளிவான இலகுவில் இனங்காணக்கூடிய, தன்மையைக்க கொண்டுள்ளது. போன்ற தாவர வகைகள் இங்கே காணப்படுவதுடன் இதில் 45 மீற்றருக்கும் அதிகமான உயரமுடைய மரங்களும் காணப்படுகின்றன.

உயிர் பல்வகைமை - தாவரங்கள்:

இதற்குத் தனிச்சிறப்புமிக்க 1922 தாவர வகைகள், தேசியமட்டத்தில் அழிந்து வருகின்ற 30 விதமான தாவர வகைகள் மற்றும் பூகோள ரீதியில் அழிந்து வரும் நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 116 விசேட தாவர வகைகள் உள்ளிட்ட 337 தாவர வகைகள் சிங்ஹராஜ வனத்திலிருந்து இனங்காணப்பட்டுள்ளன. இத்தொகையானது இலங்கையிலே ஒரு வனத்தில் இருந்து இனங்காணப்பட்டுள்ள ஆகக்கூடிய தாவர வகைகளாகும்.

சிங்ஹராஜவனத்தின் தாவர கலவையில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை கொண்ட தாவரங்கள் காணப்படுவதுடன் உயிரினங்களின் வகைகளில் அதிகரிப்பும் குறைவும் ஏற்படுவதில். உலகிலே காணப்படுகின்ற சூழல் முறைமைகளில் மிகவும் இலகுவில் அழியக்கூடிய மற்றும் அவ்வாறு அழிவுக்கு உள்ளானதன் பின்னர் மீண்டும் முன்னைய நிலைக்கு கொண்டு வருவதற்கு மிகவும் கடினமான சூழலியல் முறைமையொன்றாக இது கருதப்படுகின்றது. மேலும் இது தாவர பரம்பரைகளின்; முக்கியமான களஞ்சியமாக விளங்குகின்றது. இவற்றின் மூலம் பெற்றுக் கொண்ட சிறந்த நன்மைகள் பற்றி இன்னமும் இனங்காணப்படவில்லை. சிஹ்ஙராஜவனத்திலே பரந்த பரப்பளவினுள் பெறுமதிமக்க தாவர வகைகள் காணப்படுகின்றன. அவற்றிலே பல நூற்றாண்டுகளுக்கு முன் கொன்வானா காலத்தில் காணப்பட்ட தாவர வகைகளுக்கு சொந்தமான தாவரங்களின் தன்மைகள் இதில் அதிகமானவற்றில் காணக்கூடியதாக உள்ளன.

உயிர் பல்வகைமை - விலங்குகள்:

மிகவும் மெதுவாக பயணம் செய்கின்ற கொலுபெல்லா முதல் மிகவும் பலம்பொருந்திய புலி வரையான பரந்த அளவிலான அதிகமான விலங்குகளுக்கு சிங்ஹராஜவனமானது வாசஸ்தலமாக அமைந்துள்ளது. சிங்ஹரலாஜவனத்திலே சுமார் 140 இற்கும் மேற்பட்ட விலங்கினங்கள் உயிர்வாழ்வதாக இனங்காணப்பட்டுள்ளது.

சிங்ஹராஜவனத்திலே 19 வகையான மீன்வகைகள், 33 வகையான ஈருடகவாழிகள் 71 வகையான ஊர்வன, 147 வகையான பறவை வகைகள் மற்றும் 44 வகையான முலையூட்டிகளும் இங்கு காணப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளன. நாட்டிலே காணப்படுகின்ற உள்நாட்டுப் பறவை வகைகளில் 60% ற்கும் அதிகமானவை, அண்மையில் இனங்காணப்பட்ட otus thilohoffmanni பெயருடைய ஆந்தை வகை உட்பட இலங்கைக்கு தனிச்சிறப்புமிக்க 33 பறவை வகைகள் இவ்வனத்திலிருந்து இனங்காணப்பட்டுள்ளன. சிங்ஹராஜவனத்திலே காணக்கூடிய மிகவும் பசுமையான காட்சியாக அமைவது அதிகமான பறவை வகைகள் ஒன்றிணைந்து கூட்டம் கூட்டமாக வனத்தில் உலாவுவதாகும். இது மழைவீழ்ச்சி வனங்களில் காணக்கூடிய ஒரு காட்சியாகும். குரங்கு வகையைச் சேர்ந்த முக்கியமான பச்சை மந்தி மற்றும் கறுப்புக் குரங்கு ஆகிய இரண்டு வகைகள் இங்கு விசேடமாகக் காணக்கூடியதாக உள்ளது. மேலும் சிங்ஹராஜவனத்திலே மரைகள், நீர்நாய்கள், காற்றுப் பன்றிகள், சிறுத்தைகள், காட்டுப்பூனைகள் உள்ளிட்ட மேலும் பல்வேறு விலங்கினங்களை விசெடமாக காணக்கூடியதாக உள்ளது. வனத்தின் நடுப்பகுதியில் இருந்து நின்று காணக்கூடியதாக இலங்கை சிறுத்தையை (Panthera pardus kotiya) காணலாம்.

Idea Lynceus jasonia மற்றும் Troides Helena darsius போன்ற தனிச்சிறப்புமிக்க வண்ணத்துப் பூச்சுகள் உள்ளிட்ட 65 வகையான வண்ணத்துப் பூச்சுகள் சிங்ஹராஜவனத்திலே காணக்கூடியதாக உள்ளது. இவற்றினைவிட பாரிய சிலந்திகள், ஊர்வன, நன்னீர் மீன்வகைகள், முலையூட்டிகள் என்பனவும் சிங்ஹராஜவனத்திலே காணக்கூடியதாக உள்ளது.

நீரியல் சிறப்புத்தன்மை:

இலங்கையிலே காணக்கூடிய பாரிய இரு நதிகளான களுகங்கை மற்றும் கிங் கங்கை என்பன இந்த வனத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன. சிங்ஹராஜவனத்தின் தெற்குப் புறத்தில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் நீர் வழியானது கிங் கங்கைக்கு நீரோட்டத்தை வழங்கும் அதேநேரம் நாபொலதொள, கொஸ்குலான மற்றும் குடவகங்கை என்பவற்றின் மூலம் கலு கங்கைக்கான நீரோட்டம் கிடைக்கப் பெறுகின்றது. இயற்கை

இயற்கையாக அமைந்துள்ள சிறுபாதைகள்:

சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியத்துவமிக்க வரலாற்று ரீதியான, சூழலியல், உயிரியல் ரீதியாக முக்கியத்தவமிக்க இடங்களை பாதுகாத்து, இலகுவான முறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக் கூடிய விதத்தில் இந்த இயற்கைப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இந்த இயற்கைப் பாதைகளின் ஊடாக பயணிக்கும் போது சுற்றுலாப் பயணிகளிடம் பயிற்சி பெற்ற வழிகாட்டிகளின் உதவியினைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

முலாவெல்ல சிறுபாதை கல்லென்யாயா சிறுபாதை
தொரண எல்ல சிறுபாதை பிட்டதெனிய செல்பவுர சூழலியல் சுற்றுலாப் பிரதேசம்
வத்துராவ சிறுபாதை லங்காகம சூழலியல் சுற்றுலா பிரதேசம்
ஹல்மங்டிய தொல சிறுபாதை மோனிங்சைட் தூவிலி எல்லை சிறுபாதை
யோத நவதகஹ சிறுபாதை மோனிங்சைட் நீர்த் தடாக சிறுபாதை
சிங்ஹகல சிறுபாதை

The historic Nawanda tree , Sinhagala, and the ‘Gal-len-yaya” range of caves can be reached through Wathurawa-Mulawella Trail. This majestic Nawanda (Shorea stipularis) tree over 500 years old is a magnificent sight in Sinharaja. This endemic tree is 40 m in height and has a 6.4 m diameter. An observer who can climb Mullawella peak may rewarded with spectacular view of vistas of forest. Sinhagala is the most prominent of all the nine peaks found in Sinharaja. Kudawa - Sinhagala trail is a main attraction in Sinharaja as the continuous unbroken canopy in various hues of green can clearly be viewed from this vantage point.

வசதிகள்:
  • உடவ மற்றும் பிட்டதெனிய ஆகிய பிரதேசங்களை அண்டி பயிற்றப்பட்ட வழிகாட்டலகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • உடவ மற்றும் பிட்டதெனிய ஆகிய பிரதேசங்களில் இரண்டு தகவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலே கட்புல மற்றும் செவிப்புல உபகரணங்களுடனான ஆய்வுகூட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
  • இது தொடர்பான தகவல்கள் அடங்கிய அச்சுப்பிரதிகள் இந்த நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தங்குமிட வசதிகள்:

வனத்திற்கு அருகில் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினால் தங்குமிட வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இவற்றினை விட வனத்திற்கு இலகுவில் பிரவேசிக்கக்கூடிய தூரத்தில் தனியார் ஹோட்டல்கள் மற்றும் விடுமுறை விடுதிகள் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.

Apartments இடம் இல்லத்தின் சுவபாவம்
Number of Guest
குடவ ஆரம்ப முகாம் குடவ மோமெட்ரி 30
குடவ ஆரம்ப முகாம் குடவ கெபின் அறை 12
குடவ ஆரம்ப முகாம் குடவ கெபின் அறை 06
குடவ ஆரம்ப முகாம் குடவ கெபின் அறை 04
முரக்கெலே விடுதி குடவ இல்லம் 11
மோர்னிங்சைட் விடுதி மோனிங்சைட் இல்லம் 11
வனிகசேகர மண்டபம் - பிட்டதெனிய பிட்டதெனிய மோமெட்ரி 16
பிட்டதெனிய இல்லம் பிட்டதெனிய மோமெட்ரி 16
கிங் கங்கை வன இல்லம் பிட்டதெனிய இல்லம் 05
தங்குமிட வசதிகளை ஒதுக்கிக் கொள்ளல்

வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகள் / முகாம்கள் என்பவற்றினை பத்தரமுல்லை ரஜமல்வத்த வீதியில் அமைந்துள்ள சம்பத்பாய வளாகத்தில் காணப்படும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலவலகத்தினால் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றது. இதுபற்றிய உங்களது கோரிக்கைகளை வார வேலைநாட்களில் மாத்திரம் மு.ப. 9.00 மணிமுதல் பிப. 3.00 மணிவரை சமர்ப்பிக்க முடியும்.

தொலைபேசி இலக்கம் +94 11 2866631, +94 11 2866632, +94 11 2875540
நீடிப்பு 250
சம்பந்தப்பட்ட பிரிவு வனக் கணக்கெடுப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு
மேலதிகத் தகவல்களைப் பெறுவதற்கு அழைக்கவும்.
  • மாவட்ட வன உத்தியோகத்தர், வன அலுவலகம், இரத்தினபுரி தொ.பே, ( 045) 2222171.
  • மாவட்ட வன உத்தியோகத்தர், வன அலுவலகம், காலி தொ.பே ( 091) 2234306.

மேலே

நக்கல்ஸ் வனம்

இதில் காலை மூட்டிய யானை வடிவிலான கிரிகல்பொத்த கொம்பானிய நக்கல்ஸ் கொபோனிலெபள மற்றும் தோத்தலுகள ஆகிய ஐந்து மலை உச்சிகளைக் கொண்டு அமைந்துள்ளதனால் இதனை இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

புகைநிறைந்த மலைஉச்சி "தும்பர கந்துவெட்டிய" எனும் பெயரும் இதற்கு உண்டு. இது கண்டி மாத்தளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 21,000 ஹெக்டெயர் நிலப்பரப்பில் பரந்து காணப்படுகின்றது. இந்த மலைக்கு தும்பர மலை உச்சி என்றழைக்கப்படும் ஆழமான நிலப்பிரதேசம் இதற்காக மத்திய மலைநாட்டில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. மலை நாட்டில் இருந்து சுமார் 1000 கி.மீ. அதிகமான உயரத்தைக் கொண்ட 35 மலை உச்சிகளும் 1,500 மீற்றரை விடவும் கூடிய 20 மலை உச்சிகளும் 2,000 மீற்றரை விடக் கூடிய 2 மலை உச்சிகளைக் கொண்ட நக்கல்ஸ் வனத்தையும் இது கொண்டுள்ளது.

1873 ஆம் ஆண்டிலே 1,500 மீற்றருக்கு மேற்பட்ட உயரத்ததைக் கொண்ட நக்கல்ஸ் மலையானது காலநிலை ஒதுக்குப்பிரதேசம் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது. 2000 ஆண்டில் மே மாதத்தில் இவ்வொதுக்குப் பிரதேசமானது வனப் பாதுகாப்பு பிரதேசம் ஒன்றாகவும் அதன் பின்னர் தேசிய மனிதர்கள் மற்றும் பூகோல ஒதுக்குப் பிரதேசம் ஒன்றாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. 2010 ஆம் ஆண்டு நக்கல்ஸ் மலையானது ஹோட்டன்தென்ன மற்றும் சிவனொளிபாத மலைப் பிரதேசத்தில் உள்ளடக்கி 'இலங்கையின் மத்திய மலைநாடு' (Central Highlands of Sri Lanka) எனும் பெயர் கொண்டு இயற்கை உலக மரபுரிமை ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது.

நுழைவாயில்:

தும்பர கந்துவெட்டிய மலையை அடைவதற்கு மிகவும் இலகுவான முறையில் காரில் பயணம் செய்யக்கூடிய வழியாக, கண்டி - மாத்தளை - ரத்தோட்டை ஊடாக காணப்படுகின்ற கொழும்பு - இழுக்கும்புர வீதி, குருநாகல் - கலேவலை - நாவுல - பள்ளேகம ஊடாக கொழும்பு - இழுக்கும்புர வீதி, கண்டி - வத்தேகம - தெல்தெனிய ஊடாக காணப்படுகின்ற கொழும்பு முதல் பம்பரெல்ல வரையிலான வீதி, கண்டி - ரன்கல - கோர்பட்ஸ் - கப்பொல்ல (கொறட்டுவ உச்சி) ஊடாக உள்ள கொழும்பு - டின்ஸ்டன் வீதி.

Click here to get large map
காலநிலை:

இலங்கையில் காணப்படுகின்ற பரந்த பல்லினத்தன்மை கொண்ட அனைத்துவிதமான காலநிலைத் தன்மைகளும் தும்பர கந்தையில் காணப்படுகின்றது. இந்நிலையானது மிகவும் ஈரவலய காலநிலைத் தன்மையில் இருந்து வெப்பநிலைய காலநிலைத் தன்மை வரையில் பாரிய அளவிலான வித்தியாசத்தைக் கொண்டுள்ளது.  சராசரி ஆண்டு மழைவீழ்ச்சியாக 5,000 மி.மி. மழைவீழ்ச்சி காணப்படுகின்ற மிகவும் ஈரவலயத் தன்மை கொண்ட மலை வன வகைகளையும் இப்பிரதேசத்தில் காணக்கூடியதாக உள்ளதுடன் 2,500 மிமி. வருடாந்த மழைவீழ்ச்சியிலும் குறைந்த தாழ்நில பிரதேசங்களும் இம்மலைப் பிரதேசத்தில் காணப்படுகின்றது. சில பிரதேசங்களில் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் பனித் தன்மையினை காணக்கூடியதாக உள்ளதுடன், மேலும் அதிக காற்றுத்தன்மையும் இப்பிரதேசத்தினுள் காணப்படுகின்றது.

மரங்கள்:

மலை உச்சியை அண்மித்த பிரதேசங்களில் வெப்பவலய தாழ்நில அரைப் பசுமைத்தன்மை மிக்க வனவகைகள் காணப்படுவதுடன் இந்த வனவகைகளின் மில்ல, மொர, வெலாங், பதுள்ள ஆகிய தாவர வகைகள் உள்ளடங்கும். மேல் மலைப் பிரதேசங்களில் மழைக்காடுகளாக அழைக்கப்படு கின்ற மிகவும் பசுமைத்தன்மை மிக்க வனங்கள் உயர் தாழ்நிலப் பிரதேசங்கள், மலை உச்சிகள் என்பனவும் காணக்கூடியதாக உள்ளது.

"முகில் வனங்கள்" என்றழைக்கப்படுகின்ற உயர் பிரதேசங்களில் அமைந்துள்ள வனப்பிரதேசங்களில் அழகான ஓக்கிட் பாசிவகைகள் என்பன காணப்படுகின்றன. மரங்களின் அடிப்பிரதேசம் மற்றும் கற்களின் மீது பாசி வகைகள் படிந்து காணப்படுகின்றமை இங்கு காணக்கூடிய முக்கிய சிறப்பியல்புகளாகும். மலைகளின் கீழ் பள்ளத்தாக்கு பிரதேசங்களில் அரைப்பசுமைத் தன்மைமிக்க வனங்களை காணலாம். உலர் பள்ளத்தாக்கு பிரதேசங்களில் உலர் துணைக்குன்றுகள் ஈர அரைப்பசுமைத் தன்மைமிக்க வனங்கள் என்பனவும் அமைந்துள்ளது. கங்கைகள் மற்றும் நீர் பாதைகள் என்பவற்றை அண்மித்த பிரதேசங்களில் கங்கைகளுக்கு அருகில் உள்ள வனங்கள் பரந்து காணப்படுகின்றன.

மலைப் பள்ளத்தாக்குகளில் அதிகமான நிலப்பரப்பைக் கொண்ட புல்வெளிகளில் ஈரத்தன்மைமிக்க தாவர வகைகள் காணக்கூடியதாக உள்ளன. கடல்மட்டத்திலிருந்து 1000 மீற்றரிலும் குறைந்த உயரத்தைக் கொண்ட மலைகள் மீது ஒன்றுடன் ஒன்று மிகவும் அண்மித்து வளர்ந்துள்ள நிலப்பிரதேசங்களையும் காணலாம்.

"பிட்டவெல பத்தன" என்றழைக்கப்படும் அழகான சிறப்புமிக்க நிலப்பிரதேசம் மிகவும் பெறுமதிவாய்ந்த தன்மையைக் கொண்டுள்ளது. சுமார் 10 மீற்றர் வரையில் உயரத்திற்கு வளர்ந்துள்ள மரங்கள் சுமார் 10 ஹெக்டெயர் நிலப்பரப்பில் பரந்து காணப்படுவதுடன் இவற்றுக்கு கீழே சிறிய பள்ளத்தாக்கு ஒன்றும் 5 - 15 செ.மீ. வரையிலான கணத்தன்மையும் மிக்க மண்படலத்துடன் கூடிய கற்பாறை ஒன்றும் காணப்படுகின்றது.

தற்போது மற்றும் பழைய குடியிருப்புக்களைச் சுற்றி அடர்ந்து வளர்ந்துள்ள முட்செடிகள் சுமார் 2 மீற்றர் உயரம் வரையில் வளர்ந்துள்ளமையையும் காணக்கூடியதாக உள்ளது.

"குருகஸ்கெலே" எனும் பெயர் கொண்டு அழைக்கப்படும் வனப்பிரதேசம் ஒன்றும் நக்கல்ஸ் வனப்பிரதேசத்தில் காணப்படுகின்றமை முக்கிய அம்சமாகும். இப்பிரதேசத்தில் சுமார் 100 ஆண்டுகளை விடவும் பழமைவாய்ந்த தாவரவகைகளை காணக்கூடியதாக உள்ளதுடன் இவை 1 - 2 மீற்றர் வரையிலான உயரம் கொண்ட கிளைகளை உடைய தாவரங்கள் ஆகும். இத்தாவர வகைகளின் அடிப்பிரதேசத்தில் பாசி ஓக்கிட் போன்ற மேலும் பல சிறு தாவர வகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இத்தாவர வகையின் சிறப்பம்சம் யாதெனில் அடிக்கடி அதிக காற்றுமிக்க பிரதேசங்களில் காணக்கூடிய தன்மையாகும்.

உயிர் பல்வகைமை - தாவரங்கள்:

நக்கல்ஸ் வனப்பிரதேசத்தில் 141 விதமான தாவரங்களில் மலர்வகையைச் சேர்ந்த 1033 தாவர வகைகள் காணப்படுகின்றன. இவற்றிலே 15% மானவை இலங்கைக்கு என தனிச்சிறப்பு மிக்கவையாகும்.

உயிர் பல்வகைமை - விலங்கினம்:

நக்கல்ஸ் மலைப்பிரதேசத்தில் 128 வகையான பறவைகள், 20 வகையான முலையூட்டிகள், 60 வகையான வண்ணத்துப்பூச்சுக்கள், 17 வகையான நீர் நிலவாழ் பிராணிகள், 31 வகையான  விலங்குகள் 53 வகையான ஊர்வன மற்றும் 15 வகையான மீன்வகைகள் என்பன காணப்படுகின்றன.

காட்டுப்பன்றி, காட்டுமுயல் உள்ளிட்ட மேலும் பல முளையூட்டிகள் நக்கல்ஸ் மலைப் பிரதேசத்தில் காணப்படுகின்றன. மிகவும் உன்னிப்பாக உற்றுநோக்கக் கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு இம்மலைப் பிரதேசத்தின் பசுமைத்தன்மை மாத்திரமன்றி மான்கள், மரைகள், யானைகள், காட்டு எருதுகள், கரடிகள், கீரிப்பிள்ளை, குரங்குவகை, பச்சை மந்தி, அனில் வகை, பன்றி எலி மற்றும் முள்ளம்பன்றி போன்றவற்றை காணலாம்.

நக்கல்ஸ் மலைப்பிரதேசத்தின் 128 பறவை வகைகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அதில் 17 வகையானவை இலங்கையில் மாத்திரம் காணக்கூடிய தனிச்சிறப்புமிக்கவையாகும். நக்கல்ஸ் பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய பறவை வகை Ictinaetus malayensis  ஆகக் காணப்படுவதுடன், சிறிய பறவையாக Dicaeum erythrorhynchos காணப்படுகின்றது. மேலும் மரங்கொத்திகள், கிளிகள், மீன்கொத்திகள், கொண்டைக் குருவிகள் போன்ற மேலும் பல்வேறு பறவை வகைகள் மற்றும் முகில்களால் நிறைந்த பசுமைத் தன்மைமிக்க இவ்வனப் பிரதேசத்தை மேலும் மெருகூட்டுகின்றன.

கற்குகைகளிலும் உடைந்த கற்களுக்கு இடையிலும் பறவை வழைககளை உணவாகக் கொள்ளும் பாரிய சிலந்திகளையும் காணக்கூடியதாக உள்ளது. Orsotraeina medus மற்றும் Melanitis leda போன்ற வண்ணத்துப்பூச்சு வகைகளும் இப்பூமியிலே உள்ளமை சிறப்பம்சமாகும். இவைகள் அழுகிக் காணப்படும் பழவகைகள், விலங்குகளில் இருந்து கிடைக்கப் பெறும் உணவுகள் அழுகிக்க காணப்படுகின்ற மரங்கள் என்பவற்றின் மீது தங்கிவாழ்கின்றன. Kallima philarchus வண்ணத்துப்பூச்சி வகைகள் நிலத்திலே விழுந்து காய்ந்து காணப்படுகின்ற மர இலைகளை ஒத்த தன்மையினைக் கொண்டுள்ளது. மேலும் தனிச்சிறப்புமிக்க வண்ணத்துப்பூச்சி வகைகள் இரண்டான Troides darsius மற்றும் Papilio polymnestor என்பனவும் நக்கல்ஸ் வனப் பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவைகள் இலங்கையில் காணப்படும் பாரிய வண்ணத்துப்பூச்சி வகைகளாகும்.

நீதியில் முக்கியத்துவம்:

மகாவலி கங்கையினை போசிக்கின்ற நீர்ப்பாதைகள் பல இப்பிரதேசத்தில் இருந்து பெருக்கெடுத்து ஓடுகின்றன. நக்கல்ஸ் வனப்பிரதேசத்திற்கு கிழக்கே கீன் கங்கை மகாஓயா மற்றும் ஹஸலக்க ஓயா என்பனவும் மேற்குப்புறமாக குளுகங்கை மற்றும் கல்மல் ஓயா என்பனவும் மஹாவலி கங்கைக்கு பெருக்கெடுத்து ஓடுகின்ற நதிகளாகும்.

சமூக, பொருளாதார முக்கியத்துவம்:

விசேட உயிரியல் கலாசார நல்லிணக்கத் தன்மையினை எடுத்துக்காட்டுகின்ற 86 கிராமங்கள் நக்கல்ஸ் வனத்தை அண்மித்து அமைந்துள்ளன. இதில் வாழுகின்ற 48% மான மக்கள் விவசாயத்தின் மீது தங்கியுள்ளனர். வானம்வரை உயர்ந்து காணப்படுகின்ற மலைஉச்சிகளைச் சுற்றி அமைந்துள்ள மீமுறி கிராமமானது மீமுறி ஓயாவை அண்மித்து காணப்படுகின்றது. சிங்கள மன்னராட்சிக் காலத்தில் மன்னரின் வெறுப்பிற்கு உள்ளாகி வெளியேற்றப்பட்ட மக்கள் இக்கிராமத்தில் வாழ்ந்து வருவதாக வரலாற்றின் மூலம் தெரியவருகின்றது. இக்கிராமமானது நக்கல்ஸ் மலைத்தொடரில் காணப்படுகின்ற மிகவும் பெறுமதிமிக்க கலாசார விழுமியங்களைக் கொண்ட ஒரு பிரதேசமாக விளங்குகின்றது.

"மீமுறே" எனும் பெயருக்கு பல்வேறு பொருள்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்றின் அர்த்தம் இக்கிராமத்திலே இலுப்பம் மரங்கள் (Madhuca longifolia) அதிகம் காணப்பட்டமையினால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதாகும். தற்போதும்கூட இப்பிரதேசத்தில் இலுப்பம் மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. இலுப்பம் மரத்திற்கு சிங்களத்தில் மீகஹ என்றழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இயற்கை சிறுபாதைகள்:

There are several designated nature trails as well as bicycling routes which give the opportunity to explore and feel the enthralling landscapes across the Dumbara hills and valleys all alive with the sound of nature’s music.

கண்டி
டீன்ஸ்டன் - சிறு உலக முடிவு
டீன்ஸ்டன் - தொதலுகல
டீன்ஸ்டன் - ஹப்புகஸ்கும்புர
கும்புக்கொல்ல - வெடிலுனு குஹாவ
கங்கப்புவ - சுண்ணாம்புக் கற்குகை
பம்பர எல்ல - நக்ல்ஸ் மலையுச்சி
மாத்தளை
பிட்டவல பத்தன - சிறிய உலகமுடிவு
இலுக்கும்புர -  கொஸ்கஸ்வெல
கஹகல - மானிகல - எத்தன்வல
இலுக்கும்புர - றம்புக்ஒலுவ
இலுக்கும்புர - மானிகல - எதன்வல
றம்புக்ஒலுவ - குறஹன்கல
நாரங்கமுவ - லக்கேகல
றம்புக்ஒலுவ - தூவிலி எல்ல
எத்தன்வல - வல்பொலமுல்ல - தூவிலி எல்ல
வசதிகள்:

பிட்டவல பத்தன மற்றும் டின்ஸ்டன் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள தகவல் நிலையங்களின் ஊடாக சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான தகவல்களை உள்ளடக்கிய அச்சிடப்பட்ட புத்தகங்கள் வழங்கப்படுவதுடன் இதுபற்றி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சித் திட்டங்களும் காணப்படுகின்றன.

தங்குமிட வசதிகள்:
Apartments Location Nature of Residence Number of Guest
நக்கல்ஸ் வன இல்லம் இலுக்கும்புற டோமெட்ரி 30
தெல்கமுஓயா சூழலியல் விடுதி இலுக்கும்புற கெபின் அறைகள் 08
ரம்புக்ஒழுவ சூழலியல் விடுதி ரம்புக்ஒழுவ கெபின் அறைகள் 08
டின்ஸ்டன் வன ஒதுக்கு நிலையம் ஹூன்னஸ்கிரிய பங்களா 09
டின்ஸ்டன் முகாம் ஹூன்னஸ்கிரிய ஹூன்னஸ்கிரிய முகாம்
தங்குமிட வசதிகள் மற்றும் முகாம்கள் என்பவற்றினை முற்கூட்டியே ஒதுக்கிக் கொள்ளல்.:

வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகள் / முகாம்கள் என்பவற்றினை பத்தரமுல்லை ரஜமல்வத்த வீதியில் அமைந்துள்ள சம்பத்பாய வளாகத்தில் காணப்படும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலவலகத்தினால் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றது. இதுபற்றிய உங்களது கோரிக்கைகளை வாரநாட்களில் மாத்திரம் மு.ப. 9.00 மணிமுதல் பிப. 3.00 மணிவரை சமர்ப்பிக்க முடியும். மேலதிகத் தகவல்கள் பிராந்திய வன அதிகாரி, வன காரியாலயம் இரத்தினபுரி மற்றும் பிராந்திய வன அதிகாரி மற்றும் வன காரியாலயம் காலி ஆகிய இடங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்பு இலக்கங்கள்
+94 11 2866631, +94 11 2866631, +94 11 2875540
நீடிப்பு 250
தொடர்புகொள்ள வேண்டிய இடம்
Forest Inventory and Management Division
மேலததிக விபரங்களுக்கு:
  • Divisional Forest Officer, Divisional Forest Office, Matale. Tel: (066)222 2138
  • Divisional Forest Officer, Divisional Forest Office, Kandy. Tel: (081)223 2873

மேலே

Last Updated on Wednesday, 14 March 2012 11:33
 

eService