Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முகப்பு கல்வி, பொழுதுபோக்கு உயிரியல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வனப் பிரதேசங்கள்
உயிரியல் முக்கியத்துவமிக்க வன ஒதுக்கு பிரதேசங்கள்

உயிரியல் பல்லினத் தன்மை மற்றும் நீரியல் பெறுமதிமிக்க மிகவும் உயர்தன்மை வாய்ந்த வனப்பிரதேசங்கள் சர்வதேச உயிரியல் ஒதுக்குப் பிரதேசங்கள் மற்றும் வனப்பாதுகாப்புப் பிரதேசங்களாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த வனப்பிரதேசங்கள் பார்வையிடுவதற்கும் வனவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளன. வனங்களில் காணப்படுகின்ற இயற்கை பசுமைத்தன்மைகளை கண்டுகளிப்பதற்கும் அதன்மூலம் மனமகிழ்ச்சி அடைவதற்கும் விருப்பமுள்ள நபர்களுக்கு மிகவும் பொருத்தமான இடங்களாக பின்வரும் வனப்பிரதேசங்களைக் குறிப்பிடலாம்.

  1. ஹூருலு சர்வதேச உயிரியல் ரீதியான வனஒதுக்குப்பிரதேசம்.
  2. கன்னெலிய - தெதியகல - நாக்கியாதெனிய சர்வதேச உயிரியல் ரீதியான வன ஒதுக்குப்பிரதேசம்.
  3. உடவத்த கலே வன ஒதுக்குபிரதேசம்

ஹூருலு சர்வதேச உயிரியல் ரீதியான வன ஒதுக்குப்பிரதேசம்.

புராதன ஹூறுலுவௌ என்றழைக்கப்படும் ஹூறுலு வனப்பிரதேசமானது 1942 ஆம் ஆண்டிலே வன ஒதுக்குப்பிரதேசம் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வனப் பிரதேசமானது இலங்கையின் உலர்வலயப் பிரதேசத்தில் அமைந்துள்ளதுடன், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கு இடையே 25,000 ஹெக்டெயர் நிலப்பரப்பில் இது பரந்து காணப்படுகின்றது. 1977 ஆம் ஆண்டிலே ஹூறுலு வன ஒதுக்குப்பிரதேசத்தில் இருந்து 512 ஹெக்டெயர் நிலப்பிரதேசம் சர்வதேச உயிரியல் ரீதியான வன ஒதுக்குப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டிலே வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினால் 1,000 ஹெக்டெயர் பரப்பளவினைக் கொண்ட நிலப்பரப்பு சூழலியல் பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

நுழைவாயில்:

ஹூறுலு வனஒதுக்குப்பிரதேசத்திற்கு ஹபறனை - திருகோணமலை பிரதான வீதியினூடாக நுழைவாயில் அமைந்துள்ளது. ஹபறனை புகையிரதப் பாதையைத் தாண்டி சுமார் 100 மீற்றர் தூரம் செல்லும் போது இடப்பக்கமாக இந்த ஹூறுலு சூழலியல் பூங்காவிற்கான நுழைவாயில் அமைந்துள்ளது.

காலநிலை:

ஹூறுல வனப்பிரதேசத்தின் காலநிலையானது, உலர்வலய காலநிலைத் தன்மையை ஒத்ததாகும். மழை வீழ்ச்சியானது சமஅளவில் காணப்படுவதுடன் உயர் வெப்பநிலையுடன் இம்மழை வீழ்ச்சியானது முறையற்ற நிலையில் பரவிக்காணப்படுகின்றது. வடகீழ் பருவக்காற்று காலப்பகுதியில் அதாவது, ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையிலான காலப்பகுதியில் இதற்கு மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறுவதுடன் ஆண்டில் எஞ்சியுள்ள காலப்பகுதியானது முக்கியமாக வறண்ட தன்மையைக் கொண்டுள்ளது. இப்பிரதேசத்திற்கான சராசரி ஆண்டு மழை வீழ்ச்சியானது 1,600 மி.மீ. ஆக காணப்படுவதுடன் சராசரி வெப்பநிலையானது 27 C - 30 C இடைவெளியில் காணப்படுகின்றது.

மரங்கள்:

இவ்வனப் பிரதேசத்தில் உலர்வலய மரவகைகள் (உலர்வலயத் தன்மை கலந்து பசுமைத் தன்மையான மரவகைகள்) காணப்படுவதுடன் சாதாரணமாக பாரிய மரங்களையும் ஓரளவு பொதுவான அளவிலான மரங்களையும் இங்கு காணக்கூடியதாக உள்ளது. மிகவும் தெளிவான தாவர வகைகளும் இங்குள்ளது. 15 - 20 மீற்றர் வகை உயரமான பெரிய மர வகைகள் மற்றும் ஒன்றுடன் ஒன்று நெருங்கி வளர்ந்துள்ள தாவர வகைகளும் இங்குள்ள முக்கிய அம்சமாகும். இந்த உயர்ந்த மரவகைகளுக்கு இடையூறாக வளர்ந்து வருகின்ற பாலை மற்றும் முதிரை ஆகிய மர வகைகளும் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும். கொறகஹ, வெலிவென்ன, ஹூன_மெல்ல போன்ற தாவரங்களும் இப்பிரதேசத்திற்கு தனிச்சிறப்புமிக்கவையாகும்.

Other forest types that can be seen there are riverine forests, sparse and open forests and forest plantations mostly of Khaya, Teak, and Eucalypts.

உயிர் பல்வகைமை - தாவர வகைகள்:

முக்கிய தாவரமாக முதிரை (Chloroxylon swietenia) மற்றும் பாலை (Manilkara hexandra) போன்ற தாவரங்களும், கருங்கல்லி (Diospyros ebenum) தாவரமும் காணப்படுகின்றது. மேலும் மருதமரம், வேம்பு, இலுப்பம், கொலன், மில்ல போன்ற மரவகையும் இங்கு அதிகம் காணப்படுகின்றது.

உயிர் பல்வகைமை - விலங்குகள்:

இவ்வனப் பிரதேசத்தில் காணப்படுகின்ற முலையூட்டிகளில் தனிச்சிறப்புமிக்க குரங்கு வகை, காட்டுப் பன்றி, மான், பன்றி எலி, முள்ளம்பன்றி, முயல், சிறுத்தை, காட்டுப்பூனை, கீரிப்பிள்ளை, எருது மற்றும் யானை என்பன காணப்படுகின்றன. பறவை வகைகளில் இதற்கென தனிச்சிறப்புமிக்க ஒருசில பறவை வகைகள் காணப்படுவதுடன் அவற்றிலே காட்டுக்கோழி, சண்டைக்கோழி, நீலநிற முகத்தைக் கொண்ட குயில் என்பன முக்கியமானவையாகும்.

நீரியல் முக்கியத்துவம்:

கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி காணப்படுகின்ற ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட சம அளவிலான மலைகள் இங்கு காணப்படுவதுடன் இப்பிரதேசத்திலே காணப்படுகின்ற நீர் நிலைகள் மிகவும் பொதுவான நீர் முறைமை ஒன்றினை உருவாக்கியுள்ளது. அலுத்ஓயா, ஹல்மில்ல ஓயா, மற்றும் கல்லோயா ஊடாக நீர் நிலைகள் மகாவலி கங்கையை நோக்கி பெருக்கெடுக்கின்றன. வடக்கு மற்றும் வடமேல் திசைகளில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் நீர்நிலைகள் யான் ஓயாவுடன் கலக்கின்றது. வறட்சியான காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட மூன்று ஆறுகளையும் தவிர ஏனைய அனைத்தும் முற்றாக வற்றிவிடுகின்றன. எவ்வாறாயினும், அதிகமழைவீழ்ச்சி கிடைக்கப் பெறுகின்ற காலப்பகுதியிலே குறுகிய காலப்பகுதிக்கு சிறிது வெள்ளப்பெருக்கும் ஏற்படுவதுண்டு. ஹூறுலு வாவியின் நீர் நிலைப்பிரதேசமானது ஹூறுலு பிரதேசத்தை அண்டியதாகும். இவ்வன ஒதுக்குப் பிரதேசத்தினுள் புராதன நினைவுச் சின்னங்களாக பழங்கால குளங்கள் சிலவும் காணப்படுகின்றவை முக்கிய அம்சமாகும்.

தொல்பொருளியல் நிலையங்கள்:

இவ்வனப் பிரதேசத்தை அண்மித்து அமைந்துள்ள தல்கெடிகந்த விகாரையானது தொல்பொருளியல் முக்கியத்துவம்மிக்க ஒரு இடமாக கருதப்படுகின்றது. திஸ்ஸ மன்னனின் காலத்திற்குரிய புராதன கட்டிடங்கள், கற்குகைகள், நீர்த்தொட்டிகள் மற்றும் தூபிகள் போன்ற பலவகை தொல்பொருளியல் பெறுமதிமிக்க பொருட்கள் இங்கு காணப்படுகின்றன. மேலும் வரலாற்று சிறப்புமிக்க கட்டுவெல்கொட ரஜமகாவிகாரை என்றழைக்கப்படும் ஒரு விகாரையும் இங்கு அமைந்துள்ளது.

யானைகளைப் பார்வையிடுவதற்கான இடம்:

ஆசிய யானைகளில் அதிகமானவை உலர்வலயங்களிலே, உலர் நிலையான பசுமைமிக்க வனப் பிரதேசங்களில் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றன. உலர்வலயத்தில் காணப்படுகின்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த யானைகளைப் பார்வையிடுவதற்கான மிகமுக்கிய இடமாக ஹூறுலு வன ஒதுக்குப் பிரதேசம் பிரசித்தி பெற்றுள்ளது. ஹூறுலு வனப்பூங்காவினுள் யானைகள் கூட்டம் கூட்டமாக உலாவுவதை காணக்கூடியதாக உள்ளது. ஒக்டோபர் முதல் மே மாதம் வரையான காலப் பகுதியில் ஹூறுலு பூங்காவைப் பார்வையிடுவதற்காகச் செல்லும் உல்லாசப் பயணிகளுக்கு இது மிகவும் கண்கவர் காட்சியாக தோற்றமளிக்கின்றது.

ஏனைய பல்வேறு உலர்வலய வனப்பிரதேசங்களைப் போன்றன்றி, இந்த உலர்வலய பசுமைமிக்க வனப்பிரதேசமானது வறட்சி காலங்களில் தாவரங்கள் தமது பசுமைத்தன்மையை இழக்காதவாறு பாதுகாத்து வருகின்றது. ஹூறுலு வனப்பிரதேசத்தினுள் காணப்படும் சமவெளி பூமியானது, ஆகக்குறைந்த மனித செயற்பாடுகள் காரணமாக இப்பூங்காவானது யானைகளுக்கான சிறந்த சரணாலாயமாக விளங்குகின்றது. தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று மழை காரணமாக ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கு நிலையானது மின்னேரிய, கௌடுல்ல போன்ற பிரதேசங்களில் காணப்படுகின்ற யானைகள் இப்பிரதேசத்திற்கு மாறுவது வழக்கம்.

வசதிகள்:
  • "தெமட்டதவ" யில் அமைந்துள்ள உணவகம் மற்றும் பறவைகளை பார்வையிடுவதற்கான இடம்.
  • சமயலறை வசதியுடன் கூடிய முகாம்.
  • அரும்பொருட் காட்சியகம்
  • இயற்கை சிறுபாதைகள்
  • "பெலும்கலை" யில் அமைந்துள்ள காட்சிக்கூடம்

மேல் நோக்கி

கன்னெலிய - தெதியகல - நாக்கியாதெனிய சர்வதேச உயிரியல் ரீதியான வன ஒதுக்குப் பிரதேசம்.

கன்னெலிய - தெதியகல - நாக்கியாதெனிய வனக்கட்டிடத் தொகுதியில் ஒரு பகுதியான கன்னெலிய வனப்பிரதேசமானது இலங்கையின் தென்மேற்குப் பிரதேசத்தில் காலி நகருக்கு 35 கி.மீ. அளவு தூரத்தில் அமைந்துள்ளது. கன்னெலிய - தெதியகல - நாக்கியாதெனிய வனப்பிரதேச கட்டிடத்தொகுதியின் பரப்பளவானது 10867 ஹெக்டெயராக காணப்படுவதுடன் கன்னெலிய வனப்பிரதேசத்தின் பரப்பளவு 6,141 ஹெக்டெயராகும். கன்னெலிய வனப்பிரதேசத்தின் வரலாறானது இயற்கையின் அருட்கொடையை பிரதிபலிக்கச் செய்யும் ஒரு கதையாக அமைகின்றது. 4 தசாப்தகாலமாக பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காரணமாக சிங்ஹராஜ வனத்திற்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட தற்போது காணப்பட்டுள்ள மிகவும் கீழைத்தேய மழைவீழ்ச்சி கொண்ட வனப்பிரதேசத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கு இவ்வனப்பிரதேசத்திற்கு முடிந்துள்ளது. (வரைபடம்)

1934 ஆம் ஆண்டிலே கன்னெலிய வனஒதுக்குப் பிரதேசம் பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் 1990 ஆம் ஆண்டின் ஆரம்பகாலப்பகுதியில் இது பாதுகாப்புக்கான பிரதேசம் ஒன்றாக வெளியிடப்பட்டது. (யுனெஸ்கோ) நிறுவனத்தின் மனிதன் மற்றும் உயிரியல் ரீதியான பூகோள நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2004 ஆம் ஆண்டு கன்னெலிய வனப்பிரதேசமானது சர்வதேச உயிரியல் ரீதியான தன்மை கொண்ட வனஒதுக்குப் பிரதேசம் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது. கன்னெலிய வனப் பிரதேசமானது மிகவும் மனோரம்மியமான காப்பு ஒதுக்கப் பிரதேசமாக இனங்காணப்பட்டுள்ளது.

நுழைவாயில்:

கன்னெலிய வனஒதுக்குப் பிரதேசத்திற்கு கோறளேகம - கன்னெலிய வீதியினூடாக பயணிக்க முடியும். இது உடுகம - ஹினிதும பிரதான வீதிக்கு அருகே அமைந்துள்ள வாகனங்கள் பயணிக்கக்கூடிய ஒரு வீதியாகும். இவ்வீதியானது கன்னனெலிய வனப்பிரதேசங்கள் வரை பயணிப்பதுடன், கன்னிகித்த வாவிக்கு அருகில் பிரதான நுழைவாயில் அமைந்துள்ளது.

காலநிலை:

கே.என்.டி. கட்டிடத்தொகுதியில் பொதுவான புவியியல் தன்மைக்கு ஏற்ற மலைகள், மலை உச்சிகள் மற்றும் உயரம் குறைந்த தனிமையான குன்றுகள் என்பன காணப்படுகின்றன. இதன்வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியானது 3500 - 4500 மிமீ. ற்கு இடைப்பட்டதாக காணப்படுவதுடன், தென்மேல் பருவக்காற்று காலத்தில் அதாவது, மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து செப்டெம்பர் மாதம் இறுதிவரையில் வருடாந்த மழைவீழ்ச்சி 4445 மி.மீ. வரையில் கிடைக்கப் பெறுகின்றது. மாதாந்த சராசரி வெப்பநிலையானது 270C ஆக காணப்படுவதுடன் ஒரு நாளில் காணப்படும் வெப்பநிலையின் அளவு 40C - 0 C ஆக மாற்றமடைகின்றது. மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து மே மாதம் நடுப்பகுதி வரையில் உச்ச வெப்பநிலையொன்று இங்குநிலவுகின்றது.

மரங்களின் தன்மை:

தென்கிழக்கு ஆசியாவிலே காணப்படும் மிகவும் பெறுமதிவாய்ந்த வனங்களில் இதுவும் ஒன்றாகும். இது கீழைத்தேய ஈரவலய பசுமைத்தன்மைமிக்க வனமொன்றாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. இந்த வனப்பிரதேசத்தின் கட்டமைப்பினை உற்றுநோக்கும் போது அது பல்வேறு சிறப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளது. உயிர் பல்வகைமை மிகவும் உயர்மட்டத்தில் காணப்படுகின்ற இவ்வனமானது மிகவும் உயர்ந்த வளர்ச்சியை காட்டி நிற்கின்றது. இவ்வனப் பிரதேசத்தில் காணப்படும் மரங்களின் இயற்கை தன்மைமிக்க தாவரமாக நாதுன் வகையைக் குறிப்பிடலாம். கன்னெலிய வனப்பிரதேசத்தின் பிரதான தாவரநிலமாக பொற இனம் காணப்படுகின்றது. முன்னைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அளவிலான மரம் வெட்டும் செயற்பாடு காரணமாக இந்த வனப்பிரதேசத்தின் ஒரு பகுதி தற்போதும் கூட இரட்டை வனப்பிரதேசமாக காணப்படுகின்றது. எவ்வாறாயினும், தாவர வகைகள் மிகவும் பெறுமதிமிக்க தன்மையை கொண்டுள்ளதுடன், சபுஸ தாவர பல்வகைமையானது இங்கு ஒப்பீட்டு ரீதியில் உயர் பெறுமதியைக் கொண்டுள்ளது.

உயிர் பல்வகைமை - தாவர வகை:

கன்னெலிய வனப்பிரதேசத்தில் 301 தாவர வகைகள் இனங்காணப்பட்டுள்ளன. இத்தாவர வகைகளில் புதர் மற்றும் கன்றுகள் என்பன காணப்படுவதுடன் இதில் 25% மானது இலங்கைக்கே உரிய தனிச்சிறப்புமிக்கவையாகும். இந்த தாவர வகைகளில் 15% மானவை முக்கியமாக அழிந்துவரும் தன்மையைக் கொண்டுள்ளதுடன், 26 வகையான தாவரங்கள் எமது நாட்டிலே அழிந்துவரும் நிலையில் காணப்படுகின்றது. கன்னெலிய வனப்பிரதேசமானது, ஈரவலய வனப்பிரதேசத்திலே உயர்தனிச் சிறப்புமிக்க தாவர வகையினை கொண்டுள்ளதுடன் இதில் 60% மான தாவர வகைகள் ஈரவலயத்திற்குரியவையாகும்.

உயிர் பல்வகைமை - விலங்கினம்:

சிக்கல் வாய்ந்த சூழலியல் தன்மை கலந்துள்ள பொதுவாக மனித செயற்பாடுகள் குறைந்து காணப்படும் கன்னெலிய வனப்பிரதேசமானது உயர் பல்லினத்தன்மை மற்றும் மிகவும் தனிச்சிறப்புமிக்க விலங்குவகைகள் பல காணப்படும் ஒரு பிரதேசமாகும். கன்னெலிய வனப்பிரதேசமானது அதை அண்மித்துள்ள வனப்பிரதேசங்களில் இருந்து 220 விலங்கு வகைகளைக் கொண்டுள்ளதுடன் அதில் 41 விலங்கு வகை கன்னெலிய வனப் பிரதேசத்திற்கு மாத்திரம் தனிச்சிறப்புமிக்கவையாகும்.

மிகவும் உயர் அடர்த்தியான வனப்பிரதேசத்தைக் கொண்டுள்ள இது நீர்நிலைகள், மனித செயற்பாடுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் அதை அண்டிக்காணப்படுகின்ற வீட்டுத்தோட்டங்கள் போன்ற பல்வேறு விதமான வாசஸ்தலங்களை உள்ளடக்கிய இலங்கையிலே காணப்படுகின்ற பறவை வகைகள் பல இங்கு உள்ளன. ஈரவலய வனப்பிரதேசங்களில் காணக்கூடிய பறவை வகைகளையும் இங்கு காணலாம். இந்த பறவைகளை பார்வையிடுவதற்கு கே.டி.என். வனக்கட்டிடத் தொகுதியானது சிறந்த இடமாகும். வனத்தில் காணப்படுகின்ற வசதியான இடங்களில் பறவைகள் பல்வேறு விதமான வாசஸ்தலங்களை உருவாக்குகின்றது. இதன்காரணமாக வனத்தினுள் பல்வேறு வகையான பறவைகள் ஒன்றுகூடி கீச்சிடும் சப்தத்தை காணக்கூடியதாக உள்ளது. இந்தப் பறவை வகைகள் சிலநேரம் 30 - 35 பறவை வகைகளை உள்ளடக்கி காணப்படுவதுடன் இந்த மனோரம்மியமான காட்சியால் வனத்தின் பசுமைத் தன்மையானது மேலும் இரட்டிப்பு அடைகின்றது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் பிரகாரம் கே.டி.என். வனக்கட்டிடத் தொகுதியில் சுமார் 120 பறவை வகைகள் வாழ்ந்துவருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பறவை வகைகளிடையே இலங்கைக்கு தனிச்சிறப்புமிக்க 23 விதமான பறவை வகைகள் உள்ளதாக கூறப்படுகின்றது. KDN வன கட்டிடத்தொகுதிளயில் மிகவும் சிறிய பறவை வகைகளும் அதேபோன்று பாரிய அளவிலான பறவை வகைகளும் காணப்படுகின்றன. கறுப்பு தலையுடைய சிறுகுருவிகளும் சிவப்பு முகத்தைக்கொண்ட குயில் வகைகளும் இங்கு வாழ்கின்றமை சிறப்பம்சமாகும்.

மிகவும் அரிதான முலையூட்டிகளாக காணப்படுகின்ற Nannophrys guentheri, Ramonella palmata மற்றும் Icthyophis glutinosus உள்ளிட்ட தவளைகள், மரத்தவளைகள் போன்ற பலவகையும் இங்கு காணக்கூடியதாக உள்ளது.

இந்த வனப்பிரதேசத்தினுள் தாவர வகைகள் பல காணப்படுவதுடன் வண்ணத்துப்பூச்சி வகைகளும் அதிகமாக உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகையானவை இவ்வனத்திற்கு தனிச்சிறப்பு மிக்கவையாகும். மேலும் பல்வேறு வகையான பல்லி வகைகள் ஓணான்கள் பாம்புகள் என்பன இங்கு நிரம்பிக் காணப்படுவதுடன், இலங்கையில் காணக் கூடியதாகவுள்ள பாரிய பாம்புகளில் ஒன்றான இந்திய மலைப்பாம்பு இவ்வனப் பிரதேசத்திலேயே உள்ளது.

இலங்கையில் காணப்படும் நன்னீர் மீன்வகைகளில் 1/3 பகுதி இவ்வனத்திற்கு தனிச்சிறப்புமிக்கவையாக காணப்படுவதுடன், கன்னெலிய வனத்தில் இருந்து ஆரம்பமாகுதின்ற நீர் ஊற்றுக்கள் அதாவது கிங் கங்கையின் துணை ஆற்றுக்களில் இந்த மீன் வகைகள் அதிகமாக காணப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்மீன்வகைகள் நீரோட்டத்தின் தன்மைக்கு ஏற்ப நிரோட்டத்தின் பல்வேறுபட்ட இடங்களில் வாழ்ந்து வருகின்றன. கேடின் வனப்பிரதேசத்தினுள் காணக்கூடியதாகவுள்ள நிலத்திலே வாழக்கூடிய அதிகமான நத்தை வகைகள் இலங்கைக்கு தனிச்சிறப்பு மிக்கவையாகும்.

சிறிய அளவிலான முலையூட்டிகள் பலவும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றிலே மரை பாரிய மிருகங்களில் ஒன்றாகும். இலங்கையிலே காணப்படும் மாமிச உணவுகளை உட்கொள்ளும் பாரிய விலங்குகளில் ஒன்றான சிறுத்தை இவ்வனத்தில் வாழ்ந்து வருகின்றது. கன்னெலிய வனத்தில் எளிதாக காணக்கூடியதாக உள்ள முலையூட்டி வகைகளில் மரஅணில் மற்றும் முகங்கொண்ட பச்சை குரங்கு என்பவற்றைக் குறிப்பிடலாம்.

நீரியல் விஞ்ஞான முக்கியத்துவம்:

இலங்கையின் தென் பிரதேசத்தில் அமைந்துள்ள முக்கிய பிரதான நதிகளாகக் காணப்படும் ஜிங் கங்கை மற்றும் நில்வளா கங்கை என்பவற்றிற்கு நீர் வழங்கும் பிரதான நீர் ஊற்றுக்கள் இந்த KDN வனப் பிரதேசத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன. அதன் காரணமாக இவ்வனப் பிரதேசமானது நீரியல் விஞ்ஞான ரீதியில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த சிறு நீரூற்றுக்கள் பிரதான மூன்று நதிகளை நீரால் போசிப்பதுடன், இந்த மூன்று கிளை நதிகளின் நீர் இறுதியாக ஜிங் கங்கையை சென்றடைகின்றன. ஒரு கிளை நதியினூடாக அனகிமல எல்ல மற்றும் நாரங்கஸ் எல்ல எனும் மிகவும் பசுமையான நீர் வீழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன.

சமூகப் பொருளாதார ரீதியான முக்கியத்துவம்:

கன்னெலிய வனத்தைச் சுற்றி சுமார் 78 கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் 24 கிராமங்கள் வனக் கட்டடத்தொகுதிக்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன. கன்னெலிய வனக் கட்டடத்தொகுதியை அண்மித்து அமைந்துள்ள கிராமங்களின் கிராமியப் பொருளாதாரத் துறையாக பெரும்பாலும் தேயிலை மற்றும் நெற் செய்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. வீட்டுத் தோட்ட கலப்புப் பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன. ஒருசில கிராம வாசிகள் கித்துல், பிரம்பு மற்றும் மூங்கில் என்பவற்றினைப் பயன்படுத்தி சிறிய அளவிலான வீட்டுக் கைத்தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளனர். விறகு, சிறிய அளவிலான மரத் தேவைகள் மற்றும் முக்கியமான மூலிகைச் செடிகள் போன்ற மரமல்லாத செடிவகைகளைத் தேடிக்கொள்வதற்கு கிராம வாசிகள் இந்த வனத்தை நாடுவதுண்டு. இவ்வனப் பிரதேசத்தில் மூன்று விஹாரைகளும் காணப்படுகின்றன. இந்த வனத்துடன் அண்டிய கிராமங்களில் வாழும் மக்கள் பாரிய சமய ரீதியான உறவையும் கொண்டுள்ளனர்.

இயங்கைப் பாதைகள்:

இயற்கையின் அருட்கொடை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள விரும்பும் சூழலியல் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் திருப்திகரமான முறையில் அந்த அனுபவத்தினைப் பெற்றுக்கொள்ளக் கூடிய முறையில் வனத்திற்குள் இயற்கைப் பாதைகள் பல அமைந்துள்ளன.

  • அனகிமல எல்ல
  • வவுல் லென (வெளவால் குகை)
  • நாரங்கஸ் எல்ல
  • லிஹினிகல் குகை
  • கப்பலே கந்தை மற்றும் மற்றும் அதற்கான நுழைவாயில்
வசதிகள்:
  • பயிற்சிபெற்ற வழிகாட்டிகள்
  • வனத்தில் பல்வேறு இடங்களில் அவதானிப்பு அட்டாளைகள் மற்றும் களைப்பாறுவதற்கான இடங்கள்.
  • தகவல் நிலையம், நுழைவுச் சீட்டு வழங்கும் அலுவலகம், மாநாட்டு மண்டபம் மற்றும் வெளியே இருந்து ஓய்வெடுக்கக் கூடியவாறு அமைக்கப்பட்டுள்ள இடங்களைக் கொண்ட வனப் பாதுகாப்பு நிலையங்கள்
  • விற்பனை நிலைத்திலிருந்து தகவல்கள் அடங்கிய அச்சீட்டுப் நூல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தங்குமிட வசதிகள்:

வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் வனத்தை அண்டி தங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தங்குமிடம் அமைவு தங்குமிடத்தின் தன்மை தங்கக் கூடியவர்களின் தொகை
கரவன் கரவன் கெபின் அறைகள் 1 12
கெபின் அறைகள் 2 05
கெபின் அறைகள் 3 12
கெபின் அறைகள் 4 06
தங்குமிடங்கள் மற்றும் முகாம்களை ஒதுக்கிக் கொள்ளல்:

வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான அனைத்து விடுதிகளும் / முகாம்களும் பத்தரமுல்லை, ரஜமல்வத்தை வீதியில் அமைந்துள்ள சம்பத்பாய பிரதான அலுவலகத்திலிருந்து மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றது. இது தொடர்பான விண்ணப்பங்களை வார வேலை நாட்களில் மு.ப. 9.00 முதல் - பி.ப. 3.00 மணி வரையில் சமர்ப்பிக்க முடியும். இவற்றினை ஒதுக்கிக் கொள்வதற்கான முழுத் தொகையினையும் செலுத்துதல் வேண்டும்.

தொலைபேசி இலக்கம் : 2866631 , 2866631 , 2875540
நீட்டம் : 250
அழைக்க வேண்டிய பிரிவு : வனக் கணக்கெடுப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு
மேலதிகத் தகவல்களைப் பெற்றுக்கொளள அழைக்கவும்.
  • மாவட்ட வன உத்தியோகத்தர், மாவட்ட வன அலுவலகம், காலி. தொ.பே. இல: ( 091) 2234306.

மேல் நோக்கி

உடவத்தை வன ஒதுக்குப் பிரதேசம்

கி.மு. 1371 ஆம் ஆண்டிலே கண்டி எனும் நகரத்தின் ஆரம்பகர்த்தாவாகக் காணப்படும் கம்பளை விக்கிரமபாகு மன்னன் அக்காலத்தில் அடர்ந்த வனப் பிரதேசமாகக் காணப்பட்ட உடவத்தை வனத்திலே தமது மாளிகையை நிர்மாணித்தான். 1815 ஆம் ஆண்டு வரையில் உடவத்தை வனப் பிரதேசமானது அரசர்களுக்காக மாத்திரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அது சாதாரணப் பொது மக்களுக்குத் தடை செய்யப்பட்ட வனப் பிரதேசமாகக் காணப்பட்டது. அரச நிருவாகம் அமைதியான முறையில் இடம்பெற்று வந்த காலப்பகுதியில் மேல்நாட்டு மன்னர்களுக்கு உடவத்தை வனமானது ஒரு உல்லாசப் பூங்காவாகக் காணப்பட்டதுடன், யுத்த காலத்திலே வனத்தில் பதுங்கியிருந்து அதனை ஒரு பாதுகாப்பான இடமாக மாற்றிக்கொண்டனர்.

உடவத்தை வனப் பிரதேசமானது, கண்டி நகரிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கண்டி வாவிக்கு வடக்கே அமைந்துள்ளது. இந்த உடவத்தை வனத்தின் அரச பூங்காப் பிரதேசமானது தற்போது சுமார் 104 ஹெக்டயார் பிரதேசத்தை உள்ளடக்கி அமைந்துள்ளது. இது இன்று மிகவும் முக்கிய வனப் பிரதேசமாகக் கருதப்படுகின்றது. ஆங்கிலேயர் கண்டி இராஜதானியைக் கைப்பற்றியதன் பின்னர் இராணுவ வீதித் தடைகள் இட வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்கான காரணம் இதில் எதிரிகள் இதில் மறைந்திருந்து தாக்கலாம் என்ற அச்சமாகும். கோப்பிச் செய்கை மற்றும் போக்குவருத்து வசதிகளை ஏற்பாடு செய்தல் காரணமாக இந்த வனம் காலப்போக்கில் திறந்தவெளியாக மாறியுள்ளது. எனினும் வனப் பாதுதகாப்புத் திணைக்களமானது இந்த வனத்தை அரச காலத்தில் இருந்தவாறு மீண்டும் மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

காலநிலை:

வனப் பிரதேசத்தின் காலநிலையானது கண்டி காலநிலையை ஒத்ததாகக் காணப்படுகின்றது. தென்மேல் பருவப் பேர்ச்சி மழைவீழ்ச்சி மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து ஜுலை / ஆகஸ்ட் வரையில் கிடைக்கப் பெறுவதுடன், வடகீழ் பருவப் பேர்ச்சி மழைவீழ்ச்சி ஒக்தோபர் / நவம்பர் மாதங்களில் கிடைக்கப் பெறுகின்றது. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியான 1615 மி.மீ. வரையும், வெப்பநிலை 240 C ஆகவும் காணப்படுகின்றது.

நீரியல் முக்கியத்துவம்:

அதிக சனத்தொகை வாழுகின்ற கண்டி நகரிற்கான நீர் வழிகளின் மிகவும் முக்கிய நீருற்றுப் பிரதேசமாக உடவத்தை வனம் காணப்படுகின்றது. மிகவும் அழகான கண்டி வாவிக்கு இங்கிருந்தே நீர் சென்றடைகின்றது. சூழல் மாசடைவதைத் தடுக்கும் கட்டுப்பாட்டாளராகவும் மற்றும் கண்டி நகரைச் சுற்றி குளிர்ச்சியூட்டும் மென்மையான தன்மையினை உருவாக்கும் இடமாகவும் உடவத்தை வனம் காணப்படுகின்றது.

உயிரியல் பல்வகைத் தன்மை - தாவர வகைகள்:

இதுவொரு அடர்ந்த வனப் பிரதேசமாகக் காணப்படுகின்றது. இங்கு சுமார் 460 தாவர வகைகள் காணப்படுகின்றன. இவற்றிலே 115 தாவரங்களும், 11 வகையான கொடிகளும் அடங்கும். இவற்றில் 09 இலங்கைக்கு மாத்திரம் தனிச் சிறப்புமிக்கவையாகும். "வெசக் ஓகிட்" என்றழைக்கப்படும் தனிச் சிறப்புமிக்க ஓகிட் வகையொன்றும் உடவத்தை வனத்தில் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும். இந்த வனப் பிரதேசத்தின் உயர்ந்த இடம் "கொடிமலே" கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 அடி உயரமுடைய பிரதேசமாக விளங்குகின்றது. அரசர்கள் முக்கிய நிகழ்வுகளின் போது கொடியேற்றுவதற்கு இந்த இடத்தைப் பயன்படுத்தியுள்ளமை சிறப்பம்சமாகும்.

விலங்கினங்கள்:

கொம்பு ஓணான் இந்த வனப் பிரதேசத்தில் காணப்படும் முக்கிய ஓணான் வகைகளில் ஒன்றாகும். சந்தன சிறுத்தை, காட்டுப் பன்றி, மந்தி, முயல், அணில், முள்ளம்பன்றி, என்பன இந்த வனத்தில் காணப்படுகின்ற பாலூட்டி விலங்குகளாகும். வனத்தின் இடையிடையே குரங்குகள் கூட்டம் கூட்டமாக உள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். மேலும் இங்கு பல்வேறு தனிச்சிறப்பு மிக்க பறவை வகைகளும் காணப்படுகின்றன. அவற்றிலே மஞ்சல் குருவி, குயில், மீன் கொத்தி, சாம்பல் நிற காட்டுப்புறா, மரம்கொத்தி போன்ற மேலும் பல பறவை வகைகளும் இங்கு காணப்படுகின்றன. இலங்கையில் காணப்படுகின்ற வனங்களில் மக்கள் மிகவும் இலகுவாக செல்லக் கூடிய இடமாக உடவத்தை வனத்தைக் குறிப்பிட முடியும்.

நீர் தொட்டிகள்:

இந்த வனத்திற்கு நடுவே அழகான நீர்த் தொட்டியொன்று காணப்படுகின்றது. இதைப் சுற்றி உயர வளர்ந்த தாவர வகைகள் காணப்படுவதுடன், அதற்குப் பக்கத்தில் செழிப்பாக வளர்ந்த முங்கில் மரங்கள் காணப்படுகின்றன. கண்டி நகரிலிருந்து இந்த நீர்த் தொட்டிக்கு சுரங்கப் பாதையொன்று காணப்படுவதாக பழையவர்கள் நம்புகின்றனர்.

Forest paths:

There are number of paths in the forest. The oldest is lady Horton’s drive constructed in 1934 in remembrance of Lady Horton. Lovers walk under cooling shade of trees and shrubs is a narrow path encircles the center pond.

செங்கட குகை:

புராதன ஆவணங்களில் உள்ளவாறு, "செங்கட" எனும் துறவி ஒருவர் சிங்கள மன்னர் காலத்தில் இங்கு வாழ்ந்துள்ளார். அவரது கருத்து உடவத்தை வனமானது மிகவும் அதிர்ஷ்டமானதும், வெற்றிபெறக் கூடிய தன்மையுடையதுமான ஒரு இடமாகவும் காணப்படுவதனால், அரசர்களின் வாசஸ்தளமாகப் பயன்படுத்துவதற்கு இந்த இடம் மிகவும் பொருத்தமானது என்பதாகும். அதன் பிரகாரம் அரசர் தமது மாளிகையை இந்த இடத்தில் நிர்மாணித்துள்ளார். அவரை நினைவுகூரும் வகையில் மாளிகைக்குப் பின்புறமாக உள்ள குகைக்கு "செங்கட குகை" என்று பெயரிட்டுள்ளார். இன்றும் கூட இந்த குகையைக் காணக்கூடியதாக உள்ளது.

விஹாரைகள் மற்றும் ஆசிரமங்கள்:

சிங்கள மன்னர் காலத்தில் தியானம் செய்வதற்காக வருகின்ற பிக்குமாருக்கு இந்த வனம் திறந்துவிடப்பட்டிருந்தது. சேனாநாயக்க ஆசிரமம், தபோவன விஹாரை, கீர்த்தி ஸ்ரீ பாத்குல் விஹாரை, சிறிவர்தனாராமய மற்றும் புராதன கங்காராம விஹாரை என்பன உடவத்தை வனத்தில் காணக்கூடியதாக உள்ள முக்கிய ஐந்து விஹாரைகளாகும். இவற்றினைவிட மேலும் ஒரு சில விஹாரைகள் இங்குக் காணப்படுவதுடன், இதை அண்டி தியான நிலையமொன்றும் காணப்படுகின்றது.

கெரிசன் மயானம்:

இலங்கையில் வசித்த பிரித்தானியர்கள் மரணித்ததன் பின்னர் புதைத்த மயானம் உடவத்தை வனத்தில் காணக்கூடியதாக உள்ளது. இது கெரிசன் மயானம் என அழைக்கப்படுகின்றது. இதில் காணப்படும் சுடலை ஞாபகச் சின்னங்களில் ஸ்ரீமத் ஜோன் ட்ரொய்லியின் ஞாபகச் சன்னமானது பிரசித்தி பெற்றதாகும்.

மேல் நோக்கி

Last Updated on Wednesday, 18 January 2012 16:09
 

eService