Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முகப்பு சேவைகள்
சேவைகள்

நடுகைப் பொருட்கள்

வனத்திணைக்களத்தினதும் பொது மக்களினதும் தேவைகளுக்காக நாடு முழுவதும் அவசியமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதற்காக வன நாற்று மேடைகளைக் கொண்ட வலைப்பின்னலை இத் திணைக்களம் பராமரித்து வருகின்றது.மாவட்டத்துக்கு ஒன்றோ அதற்கு அதிகமாகவோ வன நாற்று மேடைகள் உண்டு. இந்த நாற்று மேடைகளிலிருந்து பல வகையான மரக்கன்றுகளை வாங்கமுடியும். இந்த நாற்று மேடைகள் 9.00மு.ப - 3.00பி.ப வரை கிழமை நாட்களில் திறந்திருக்கும். திபானமையிலும் ரத்மலானயிலும் உள்ள நாற்று மேடைகள் சனிக் கிழமைகளிலும் திறந்திருக்கும். கிடைக்க கூடிய மரக்கன்றுகள் பற்றிய விபரங்களையும் ஏனைய தகல்களையும் பெரும்பாக வன அலுவலகங்களிலிருந்தும் வட்ட வன அலுவலகங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

விலை மட்டம்

பிரிவு விலை (ரூபா)/ மரக்கன்று
மரக்கன்றுகள் 4”x9” பொலிப் பைகளில்
15.00
மரக்கன்றுகள் 6”x9” பொலிப் பைகளில்
20.00
மரக்கன்றுகள் 12”x18” பொலிப் பைகளில்
150.00
தேக்கு துண்டம் 10.00

வன நாற்று மேடைகளின் பட்டியல் PDF கோவை.

மர வியாபாரங்களுக்கான பதிவுகள்

வனக்கட்டளைச் சட்டத்துக்கமைய தனியார் மர வியாபாரங்கள் பதிவு செய்யப்பட வேண்டியது சட்டத்தின் தேவையாகும். வனத்திணைக்களம் இதற்கான வருட அனுமதிப் பத்திரங்களை வழங்குகின்றது.

 • மரவியாபாரங்கள் பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் (PDF கோவை)
 • நாட்டின் பதிவு செய்யப்பட்ட மர வியாபாரங்களுக்கான பட்டியல்.

ஏற்றுமதி அனுமதிப் பத்திரம் வழங்கல்

வனக்கட்டளைச் சட்டத்தின் கீழ் எந்தவொரு காட்டு விளை பொருளையும் ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில் வனத்திணைக்களத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்பது சட்டத்தின் தேவையாகும். இவ்வனுமதிப் பத்திரங்கள் சம்பத் பாய பத்தரமுல்லயிலுள்ள வனத்திணைக்கள தலைமை அலுவலகத்தினால் வார நாட்களில் வழங்கப்படுகின்றன. மேலதிக தகவல்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

சிரேஷ்ட பிரதி வனப் பாதுகாவலர் (பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கல்)

தொ பே இல : +94 112 866629
மின்அஞ்சல் : sdcfple[AT]yahoo.com

ஏற்றுமதி அனுமதிப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள்( PDF கோவை).

வனத்திணைக்கள நூலகம்

இந்நாட்டின் தலைமை வனவியல் நூலகமாக மதிக்கப்படும் வனத்திணைக்கள நூலகம் 1940இல் நிறுவப்பட்டதாகும். இது வரலாறு ரீதியான சுவாரஸ்யம் மிக்க கையிருப்புகளையும், (இத் திணைக்களம் மட்டுமே 1887, லிருந்து) வனவியல் சார்பான நடைமுறையிலுள்ள தொடர்களையும், வெளியீடுகளையும் பரந்த அளவில் கொண்டுள்ளது. இந்நூலகம் தன்னகத்தே சுமார் 10000 நூல்களையும், 300 அறிக்கைகளையும், 70 தலைப்புகளிலுள்ள சஞ்சிகைகளையும், ட்ரீ சிடி பொரஸ்டிரி கொம்போடியம் எனும் இரண்டு சர்வதேச மதிப்புள்ள வனவியல் ஆராய்ச்சி தகவல் தரவுத்தள இறுவெட்டுகளையும் கொண்டு வனவியல் துறையிலுள்ளோர்க்குச் சேவையாற்றுகின்றது.வழமையாக க்றே இலக்கியம் என அழைக்கப்படும் பிரசுரிக்கப்படாத அதிகமான ஆய்வறிக்கைகளும் இங்குள்ளன. ஏனைய அனேக விஷேட நூலகங்களை விட இந்நூலகம் ஒரு முக்கிய விடயப் பகுதியினால் வேறுபட்டுள்ளது. வனவியல் வேலைகள் பற்றிய வரலாற்றுக் காரணிகள் வழமையாக செயன்முறை முக்கியத்துவம் அளிக்கத் தக்கவையாக இருப்பதுடன் காலத்தினால் அவைகள் பெறுமதியை இழப்பதில்லை. எனவே இதன் கண்ணுள்ள கையிருப்புகளில் மிகவும் சிறிய அளவே செல்லுபடியாகாதென நிராகரிக்கப்படும். வனவியல் நூலகம் ENLINET (சுற்றாடல் நூலக வலைப்பின்னல்) AGRINET ( விவசாயத் தகவல் வலைப்பின்னல்) எனுமமைப்புகளின் உறுப்பினராக உள்ளதோடு இலங்கை விஞ்ஞானத் தொழினுட்ப தகவல் வலைப்பின்னலின் (SLISTINET) கிளையாக இருந்து தேசிய ஒன்றியப் பட்டியலுக்கான தரவுகளை வழங்குகின்றது. வனவியல் பற்றிய அறிவைப் பெற விளைபவர்களுக்கு பெரும்பாலும் உசாத்துணை நூலகமாக விளங்கும் இது அவ்வாறான சேவையை வழங்குகின்றது. இதன் பயன் பெறுவோரைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

 • வனத் திணைக்கள அலுவலர்கள்
 • ஏனைய அரச, அரச சார்பற்ற நிறுவன அலுவலர்கள்.
 • கல்லூரி, பட்டப்படிப்பு, மேற்பட்டப் படிப்பு மாணவர்கள்
 • வெளிநாட்டுப் பார்வையாளர்கள்
 • வன அடிப்படையிலான தெரழில் சார்ந்தவர்கள்
 • ஏனைய ஆய்வாளர்கள்
 • எதிர்கால தோட்ட நிர்வாகிகள்
 • ஊடகவியலாளர்கள
 • பாடசாலை மாணவர்கள்
 • பொதுமக்கள்

இங்கே உள்ள வனவியலும் இது சார்ந்த விடயங்கள் பற்றியதுமான சில சர்வதேச உள்நாட்டுச் சஞ்சிகைத் தொடர்களாவன

ஆங்கிலம் சிங்களம்
Ambio Arana (Sinhala)
Annals of Forestry Adahasa (Sinhala)
Asian Biodiversity Annals of the Department of Agriculture
Flora of Malesiana Bulletin Bulletin of the Sri Lanka Rubber Research Institute
Forest Genetic Resources Ceylon Journal of Science
Forest Products Journal The Ceylon Journal of Medical sciences
Forest Trees and Livelihoods Coconut Bulletin
FPRDI Journal Cocos
Gajah Economic Review
GIM International Diyadama (Sinhala)
The Indian forester Journal of the Rubber Research Institute of Sri Lanka
Indian Journal of Forestry Journal of the National Science Foundation
The International Forestry Reveiw Journal of the Soil Science Society of Sri Lanka
International Forest Fire News Karmantha (Sinhala)
IUFRO News Loris
Journal of Non Timber Forest Mihimandala (Sinhala)
Journal of Sustainable Forestry Ruk (Sinhala)
Journal of Tropical Forest Science Pusthakala Pravurthi (Sinhala)
The Malaysian Forester Soba (Sinhala)
The National Geographic Wanajeevi (Sinhala)
New Zealand Journal of Forestry Sicnece -
SIDA Contributions to Botany -
Tigerpaper -
Tropical resources -
Unasylva -
World Conservation -

சேவை நேரம்

வார நாட்கள்: வார நாட்களில் நூலகம் மு.ப 9.00 - பி.ப 4.00 வரை வாசகர்களுக்காகத் திறந்திருக்கும் நூலகத்தின் பிரவேச அனுமதியைப் பெறுவதற்கு நடைமுறையிலுள்ள பெறுமதியான அடையாள அட்டையைச் சமர்ப்பிக்கக் கோரப்படுவர். பாவனையாளர்கள், ஏனைய நூலக பாவனையாளர்களையும் அலுவலர்களையும் மதித்து நடக்கவும், நூலக பொருட்களையும், வசதிகளையும் நல்ல முறையில் பயன்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

மேலதிக தகவல்களுக்குத் தொடர்பு கொள்ள

நூலகர்,
வனத்திணைக்கள நூலகம்,
வனத்திணைக்களம்,
சம்பத்பாய,
த.பெ.இல: 03,
பத்தரமுல்ல.
தொ.பே.இல: 011-2867237

 

Last Updated on Thursday, 24 May 2012 13:11
 

eService